தன் காதல் குறித்து அறிவித்த நடிகை தன்யா.. காதலனுடன் நெருக்கமாக இருக்கும் ஸ்டில்

Tanya Ravichandran Marriage Actress
By Bhavya Jul 16, 2025 05:30 AM GMT
Report

தன்யா ரவிச்சந்திரன்

பிரபல மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானார் தன்யா ரவிச்சந்திரன். இவர் 'பலே வெள்ளையத்தேவா' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.

இப்படத்தை அடுத்து பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், அகிலன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான ரசவாதி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தன்யா ரவிச்சந்திரன்.

தன் காதல் குறித்து அறிவித்த நடிகை தன்யா.. காதலனுடன் நெருக்கமாக இருக்கும் ஸ்டில் | Tanya With Her Lover Photo Viral

அழகிய ஸ்டில் 

இந்நிலையில் தற்போது அவரது காதல் குறித்தும், காதலன் யார் என்பது குறித்தும் தன்யா அவரது இன்ஸ்டா பக்கத்தில், அவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.