கொரோனாவை கண்டுகொள்ளாமல் 250 பேரை வைத்து திருமணம்! அதிர்ச்சியில் மணமகன்..
உலகையே அதிரவைத்து கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். இந்தியாவில் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி தாக்கத்தை கட்டுப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் இருக்கும் முத்தியாலகுடம் என்ற கிராமத்தில் கடந்த 14ஆம் தேதி 250 பேர் கூடிய திருமண விழா நடைபெற்றது. சமுக இடைவெளி முக கவசம் அணியாமல் கலந்து கொண்டவர்கள் கவலையில்லாமல் இருந்துள்ளனர்.
திருமணம் விழா முடிந்து அனைவரும் வீடு திரும்பிய நிலையில், சுகாதார துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. உடனே திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில், 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் மணமகனின் தந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் அனைவரும் தன்மைப்படுத்தியபடி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இறந்தவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்கு செலுத்த யாரும் முன்வரவில்லை. பின் கிராம பஞ்சாயத்தை கூட்டி பேசியபின் இறுதி சடங்கு செய்துள்ளனர்.