மூத்த வயது பெண்ணை திருமணம் செய்கிறாரா சச்சின் மகன் அர்ஜுன்!! வயது வித்தியாசம் இதான்..
அர்ஜுன் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானாக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய மகன் அர்ஜுன் டெண்டுல்கரை ஐபிஎல் போட்டிகளில் விளையாட வைத்து பிரபலப்படுத்தினார். தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அர்ஜுன், தனது ஆல்-ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
25 வயதாகும் அர்ஜுன், உள்நாட்டு கிரிக்கெட்டில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் நிச்சயதார்த்தம் சமீபத்தில் முடிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சானியா சந்தோக்
அர்ஜுனின் வருங்கால மனைவி சானியா சந்தோக். இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ரவி கையின் பேத்தி ஆவார். சோஷியல் மீடியா பிரபலமாக உள்ள சானியா சந்தோக்கை தான் அர்ஜுன் டெண்டுல்கர் நிச்சயம் செய்துள்ளார்.
மேலும், ஹோட்டல், உணவு, ஐஸ்கிரீம் போன்ற பல்வேறு துறைகளில் பல வணிக முயற்சிகளைக் கொண்ட ஒரு முக்கிய வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் சானியா.
WVS-இல் ABC திட்டத்தை முடித்து, கால்நடை தொழில்நுட்ப வல்லுநராகவும், செல்லப் பிராணிகளுக்கான தோல் பராமரிப்பு பிராண்டான 'Mr. Paws' இன் நிறுவனராகவும் திகழ்ந்து வருகிறார் சானியா. சானியாவின் குடும்பத்திற்கு இன்டர் கான்டினென்டல் ஹோட்டலும், ப்ரூக்ளின் க்ரீமரியும் சானியாவின் குடும்பம் வைத்துள்ளனர்.
வயது வித்தியாசம்
இந்நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் திருமணம் செய்யப்போகும் பெண் சானியாவுக்கு 27 வயதாகிறது. அர்ஜுன் டெண்டுல்கருக்கு தற்போது 25 வயது. 1 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்யப்போவதால், தந்தை சச்சின் டெண்டுல்கரை போல் மூத்த வயது பெண்ணை திருமணம் செய்யப்போகிறார் அர்ஜுன் டெண்டுல்கர்.