சூர்யாவை மிஞ்சிய தல! அந்த விஷயத்தை யாருக்கும் தெரியாமல் செய்த நடிகர் அஜித்! வைரலாகும் புகைப்படம்..

ajith suriya poorchildren
By Jai Aug 30, 2021 04:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல கஷ்டங்களை கண்டு சினிமாவை தாண்டி பல திறமைகளை கொண்டு தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்று வருபவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பகாலத்தில் பல தோல்விகள், விபத்துக்கள், அறுவை சிகிச்சைகள் என பல கஷ்டங்களை மீறி இந்த இடத்தினை பிடித்து வருகிறார்.

துப்பாக்கி சுடுதல், இளைஞர்களை வைத்து ட்ரோன் மூலம் சாதனை படைத்து வருகிறார். அந்தவகையில் கடந்த 2010ல் 60 குழந்தைகளை விமானத்தில் அழைத்து சென்று அவர்களின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் தல அஜித்.

அப்போது எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடிகர் சூர்யா சூரரை போற்று படத்தின் வெளியீட்டிற்கு முன் விமானத்தில் ஏழைக்குழந்தைகளை அழைத்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.