தலயே சொல்லிட்டாரு.. தவெக நெரிசலில் மயங்கி உயிரிழந்த அஜித் ரசிகர் கடைசியாக கூறியது..

Gossip Today Thamizhaga Vetri Kazhagam
By Edward Oct 28, 2024 12:30 PM GMT
Edward

Edward

in Gossip
Report

3 பேர் மரணம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று அக்டோபர் 27 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தலயே சொல்லிட்டாரு.. தவெக நெரிசலில் மயங்கி உயிரிழந்த அஜித் ரசிகர் கடைசியாக கூறியது.. | Thala Fan Died In Tvk Manadu Relation Emotional

தவெக கட்சியை சேர்ந்த சீனிவாசன், கலை என்ற இருவர் விபத்துக் காரணமாக மரணமடைந்தனர். மேலும் மாநாட்டில் கலந்து கொண்டு ஒரு இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இளைஞர் மரணம் குறித்து அவரை வளர்த்த உறவினர் பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், நேற்று(மாநாடு நடந்த முன் தினம்) நன்றாக தான் இருந்தான். வேலைக்கு போய்ட்டு 10 மணிக்கு நல்லாதான் பேசிட்டு இருந்தான்.

எல்லாரும் மாநாடு போறாங்க நானும் போறேன்னு சொன்னான். நீ தல ஆளுட நீ ஏன் போற போகாதன்னு சொன்னேன். தலயே சொல்லிட்டாரு, என் வோட்டு தளபதிக்கு தான்னு என்னிடம் சொன்னான். அதன்பின் போனவன் 3 மணிக்கு செத்துட்டான்னு சொல்றாங்க என்று அழுதபடி கூறியிருக்கிறார்.