ஒரே கேரவனில் தலதளபதி! பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வைரல் புகைப்படங்கள்..
தமிழ் சினிமாவில் தளபதி என்ற பெயருடன் உச்சக்கட்ட இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். அதே போல் கிரிக்கெட்டில் தல என்று பெயர் பெற்று பல கோடி ரசிகர்களிடம் கேப்டன் கூலாக இருந்து வருபவர் எம் எஸ் தோனி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தோனியும் விஜய்யும் ஐபிஎல் சென்னை அணியின் போட்டிகளில் சந்தித்து நண்பர்களாக இருந்தனர்.
அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. தற்போது தோனி இந்த ஐபிஎல் 2021க்காக சில தினங்களுக்கு முன் சென்னை வந்துள்ளார். பயிற்சியில் ஈடுபட ஆகஸ்ட் 13ல் சென்னை வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவுள்ளனர். இந்நிலையில், சென்னையில் கோகுலம் ஸ்டூடியோவில் விளம்பர சூட்டிங்கில் பங்கேற்று வரும் இடத்தில் தான் தளபதி விஜய்யின் மாஸ்டர் பட ஷூட்டிங் நடந்து வருகிறது.
இதை அறிந்த தோனி விஜய்யை பார்க்க அவரது கேரவனுக்கு சென்று சந்துள்ளார். சந்தித்து இருவரும் பேசிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி டிரெண்டிங்கை கைப்பற்றியுள்ளது.




