நறைத்த முடி!! 41 வயதிலேயே ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை ஜோதிர்மயி...
ஜோதிர்மயி
மலையாள சினிமாவில் கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான பைலெட் என்ற படத்தில் சிறு ரோலில் நடித்து அதன்பின் இஷ்டம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை ஜோதிர்மயி.
இப்படத்தினை தொடர்ந்து தமிழில் சிவலிங்கம் ஐபிஎஸ், தலைநகரம், சபரி, நான் அவன் இல்லை, பெரியார், அறை எண் 305ல் கடவுள், வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் ஒருசில கன்னட படங்களில் நடித்து வந்தார். கடந்த 2004ல் நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்து படங்களில் நடித்து வந்த ஜோதிர்மயி, 2011ல் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் 2015ல் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான அமல் நீரத் என்பவரை திருமணம் செய்தார்.
அதன்பின் பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிர்மயி, மீண்டும் 2024ல் Bougainvillea என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
41 வயதே ஆன ஜோதிர்மயி, நறைத்த முடியும் காணப்படுவதை பார்த்து அந்த நடிகையா இது என்று புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.