தலைவர் 173ல் இருந்து விலகிய சுந்தர் சி!! இதுதான் காரணம்!! பிரபலம் ஓபன் டாக்..
தலைவர் 173
கமல் ஹாசன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் தலைவர் 173 படத்தினை இயக்க சுந்தர் சி கமிட்டானதாக கடந்த மாதம் ராஜ் கமல் நிறுவனம் வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்தனர்.
தலைவர் 173 படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி, கண்ணியமான முறையில் அறிக்கை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இதற்கு என்ன காரணம் என்று பலரும் பலவிதமான காரணங்களை கூறி விமர்சித்தும் வந்தனர். இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன், தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலக காரணம் என்ன என்பதை பகிர்ந்துள்ளார்.

காரணம்
அதில், இந்த கதையை கமல்தான் சுந்தர் சிக்கு சொல்லி டெவலப் பண்ணி எடுத்துவரச் சொல்லியிருக்கிறார். சுந்தர் சியும் கதையை திருத்தி கமலிடம் கொண்டு சென்றுள்ளார். ஒவ்வொருமுறையும் சொல்லும் போது கமல், பல திருத்தங்களை சொல்லிட்டே இருந்துள்ளார்.
ஒருக்கட்டத்தில் சுந்தர் சி-யால் பொறுக்கமுடியாமல் தான் கோபத்தில்தான் அந்த அறிக்கையை சுந்தர் சி வெளியிட்டிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து, ரஜினி, ராஜ் கமல் நிறுவனத்திற்கு கூட தெரியாதாம் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய பத்திரிக்கையாளர் பிஸ்மி, சம்பந்தப்பட்ட இடத்தில் கேட்ட தகவல் என்ன வென்றால், இது சுந்தர் சி-யின் கதை தான். இதை, முதலில் கமலிடம் கூறியிருக்கிறார் சுந்தர் சி.
இது பேய் படம், ஜாலியான பேய் படம். அரண்மனை போல் இருக்கும் பேய் படமில்லை. கருத்தியலா கூற சிக்கல் இருப்பதாக கமல் கூறியிருக்கிறார்.
கதை குறுக்கீடல்
கமலின் குழுவினர் ஒருவர் கதை நன்றாக இருக்கு என்று அவரை சமாதானப்படுத்தி கதையை ஓகே சொல்லியிருக்கிறார்கள். அதன்பின் தான் ரஜினியிடம் கதை போக, ஒவ்வொரு முறையும் ரஜினியிடம் கதையை டெவலப் பண்ணி எடுத்துச்சென்றுள்ளார்.

விலகுவதாக அறிவித்த அறிக்கைக்கு முன், சுந்தர் சி, ரஜினியிடம் முழு கதையை கொடுத்துள்ளார். ஆனால் அது ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறியதால் மன கஷ்டம் ஏற்பட்டிருக்கிறார் சுந்தர் சி.
கமலுடன் சண்டை வந்தாலும், ரஜினியுடன் சண்டை வந்தாலும், சொல்லிவிட்டு தான் வெளியில் வரவேண்டும். ஆனால் சுந்தர் சி யாரிடமும் சொல்லாமல் அந்த அறிக்கையை வெளியிட்டதாக பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.