என்னப்பா லிஸ்ட் இப்படி போய்ட்டு இருக்கு! தளபதி 66ல் நடிகைகளை அள்ளித் தூக்கும் இயக்குனர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் ஹைதராபாத்தில் நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
பூஜையிலேயே தமன் இப்படத்திற்கு இசையும் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இந்நிலையில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன் தயாரிப்பில் படத்தில் யார் யார் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பை சமுகவலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்.
அந்த வரிசையில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை ஜெயசுதா, நடிகை சங்கீதா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே தளபதி 66ல் கமிட்டாகியுள்ளார்கள்.
மேலும் காமெடிக்காக யோகிபாபுவை கமிட் செய்துள்ளது படத்தின் பெரிய விஷயமாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள். தற்போது பிக்பாஸ் நடிகை சம்யுக்தாவை முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் கமிட் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வனாக அறிவித்துள்ளனர்.
இப்படியே சென்றால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே வம்சி அள்ளிவிடுவாரோ என்று ரசிகர்கள் காமெடியான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Thalapathy's Rolls Royce ride with #Thalapathy66 star-cast be like~ pic.twitter.com/Dpxt2NRe9y
— ᴮᶦᵍᶦˡ Ak (@AKjaiii) May 10, 2022






