விஜய்க்கு 275 கோடி!! தளபதி69 படத்தில் இந்த நடிகைகளுக்கு இத்தனை கோடி சம்பளமா..
தளபதி69
இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தன்னுடைய 69வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவலை படக்குழுவினர் கடந்த 3 நாட்களாக வெளியிட்டு வருகிறார்கள்.
பீஸ்ட் படத்தினை தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். மேலும் இயக்குநரும் நடிகருமான கெளதம் வாசுதேவ் மேனம் தளபதி69 படத்தில் இணைந்துள்ளார். மேலும் இரண்டாம் கதாநாயகியாக நடிகை மமிதா பைஜு நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் நடிக்க யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சம்பளம்
நடிகை மமிதா பைஜுவுக்கு 1 கோடி ரூபாயும், கெளதம் மேனனுக்கு 50 லட்சம் சம்பளமும், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு 5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
மேலும் படத்தில் வில்லனாக கமிட்டாகி இருக்கும் நடிகர் பாபி தியோலுக்கு 6 கோடி ரூபாய் சம்பளமும் பேசப்பட்டுள்ளதாம். விஜய்க்கு மட்டும் இப்படத்தில் நடிக்க 275 கோடி ரூபாய் சம்பளமாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வழங்கவுள்ளார்களாம்.
மேலும் இப்படத்தில் நடிகர் நரேன் மற்றும் நடிகை பிரியாமணியும் நடிக்கவுள்ளார் என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.