தளபதியை பாலிவுட் பக்கம் இழுக்கும் இயக்குநர்? அதுவும் லேடிசூப்பர் ஸ்டார் படத்திலா!

vijay bigil atlee nayanthara shahrukh khan
By Edward Sep 08, 2021 06:41 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு தற்போது நெல்சன் திலீப்குமாருடன் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் போதே தளபதி 66 செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தார் விஜய்.

இயக்குநர் அட்லீ விஜய்யுடன் 3 படங்களை இயக்கிவிட்டு தற்போது பாலிவுட்டின் கிங்காங் ஹாருக்கானை வைத்து படம் ஒன்றியை இயக்கி வருகிறார். அவருக்கு ஜோடியான லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா மற்றும் நடிகை பிரியா மணி நடிக்கவும் கமிட்டாகியுள்ளனர். கோவாவில் படப்பிடிப்பு துவங்கி நிலையில் ஒரு புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் ஷாருக்கான் - அட்லீ படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இந்தியா முழுவதும் இப்படம் வெளியாகவுள்ளதால் தென்னிந்தியாவின் பிரபலமாகி இருக்கும் விஜய் நடித்தால் படத்தின் வியாபாரம் அதிகரிக்கும் என்பதால் தானாம்.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்ற தகவல் உறுதியாகவில்லை. இதற்கு முன் பிகில் படத்தில் ஷாருக்கான் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகி அது இல்லாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.