விஜய்யை வச்சு படம் எடுத்த தயாரிப்பாளர்.. ரிலீஸுக்கு மும்பே பல கோடி நஷ்டமா?
GOAT
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்றுள்ளார். இதனால் சினிமாவிலிருந்து முழுமையாக விலகப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
தளபதி 69 தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கப்போகிறது. அதற்குமுன் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் GOAT. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
லாபமா? நஷ்ட்டமா
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் ரிலீஸுக்கு மும்பே தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்துள்ளதா? இல்லையா? என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, GOAT திரைப்படம் ரூ. 333 கோடி செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜய்யின் சம்பளம் மட்டுமே ரூ. 200 கோடி ஆகும் என்கின்றனர்.
இந்த நிலையில், GOAT படத்தை ரூ. 416 கோடிக்கு பிசினஸ் செய்துள்ளார்களாம். இதன் மூலம் படம் வெளிவருவதற்கு முன்பே தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ. 83 கோடி லாபமாக கிடைத்துள்ளது.