பல கோடி செலவில் தியேட்டர் கட்டும் விஜய்.. எங்கு தெரியுமா

Vijay
By Kathick Jul 23, 2024 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இதன்பின் தளபதி 69ல் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ஹெச். வினோத் இயக்குவார் என சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படம் குறித்து தகாவால் வெளிவரவில்லை. மேலும் இது நடிகர் விஜய்யின் கடைசி படம் ஆகும். ஏனென்றால் இப்படத்திற்கு பின் முழுமையாக அரசியலில் விஜய் ஈடுபடவுள்ளார்.

பல கோடி செலவில் தியேட்டர் கட்டும் விஜய்.. எங்கு தெரியுமா | Thalapathy Vijay Is Going To Build Theatre

சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு செல்லும் விஜய், பல கோடி செலவில் பிரமாண்டமாக தியேட்டர் ஒன்று கட்டப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளிவந்தது. ஆனால், எந்த இடத்தில் கட்டப்போகிறார் என சொல்லப்படாத நிலையில், தற்போது அதுகுறித்து தெரியவந்துள்ளது.

புதுச்சேரியில் தான் நடிகர் விஜய் தியேட்டர் கட்டப்போகிறாராம். புஸ்ஸி ஆனந்தின் வழிகாட்டுதலின்படி தான் புதுச்சேரியில் விஜய் தியேட்டர் கட்டுகிறார் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.