தளபதி விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா? கார் தொகை மட்டும் எத்தனை தெரியுமா!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து தளபதி என்ற பெயரோடு கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது பீஸ்ட் படத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் போது தளபதி 66 படத்தின் சம்பளம் மற்றும் அப்டேட்கள் வைரலாகியது.
தற்போதைய 2019 ஆம் ஆண்டுவரை நடிகர் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு 56 மில்லியன் டாலர்களாம். இந்திய மதிப்பில் ரூ. 420 கோடி வரை உள்ளதாக தெரியவந்துள்ளது. நடிகர் விஜய்யிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார், ரூ. 1.30 கோடி மதிப்பிலான ஆடி A8, ரூ.75 லட்சம் மதிப்புள்ள BMW series 5, ரூ. 90 லட்சம் மதிப்புள்ள BMW X6, ரூ. 35 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் உள்ளிட்ட கார்கள் மற்றும் விலையுயர்ந்த சைக்கிள் மற்றும் பைக்குகளும் உள்ளதாம்.
மேலும், சென்னையில் சாலி கிராமம், நீலாங்கரை மற்றும் பனையூர் உள்ளிட்ட இடங்களில் நடிகர் விஜய்க்கு பங்களாக்களும் இருக்கிறது.
தற்போது தளபதி 66 படத்திற்காக வருமான வரியை சேர்த்து சுமார் 120 கோடி வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.