தலதளபதியுடன் இப்படிபட்ட படம் பண்ணுவேன்! இயக்குநர் வெங்கட் பிரபு, சிம்புதேவன் ஓப்பன்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருபவர் வெங்கட் பிரபு. சென்னை 28 படத்தினை இயக்கியதை அடுத்து சரோஜா, கோவா உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின் தல அஜித்தின் கேரியரை மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு சென்ற படமான மங்காத்தா படத்தினை இயக்கி சூப்பர் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தார்.
தற்போது மாநாடு படத்தினை இயக்கியும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்த படமான கசட தபர படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் பிரமோஷனுக்காக இயக்குநர் சிம்புதேவன் மற்றும் வெங்கட் பிரபு, சுப்பு பஞ்சு மூவரும் தனியார் இணையதளத்திற்கு அளித்த பேட்டியொன்றில் சினிமா அனுபவங்களை பகிர்ந்தும் கசட தபர படத்தினை பற்றியும் பகிர்ந்துள்ளார்.
அதில் தளபதி விஜய்க்கு என்ன கதை எழுதுவீர்கள் என்ற கேள்விக்கு, மாஸ் படங்கள் நடித்து வரும் விஜய்க்கு காமெடி படம் எடுப்பேன் என்று கூறியுள்ளார் வெங்கட் பிரபு, அஜித்திற்கு மாஸ் படம் என்றால் சூப்பர் மேன் படம் போன்று எடுப்பேன் என்று சிம்பு தேவன் கூறியுள்ளார்.