பிக் பாஸ்: வெளியேறுவதற்கு முன் தர்ஷிகா விஷாலுக்கு கொடுத்த கிப்ட்.. அப்போ உண்மை தான் போல
பிக் பாஸ்
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்தை நோக்கி பிக் பாஸ் நிகழ்ச்சி செல்வதால் கடந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடைபெற்று சத்யா மற்றும் தர்ஷிகா என இருவர் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறினர்.
இதில், தர்ஷிகா மற்றும் விஜே விஷால் இருவரும் இணைந்து ஒன்றாக சுற்றுவது என இந்த ஜோடி கொடுக்கும் லவ் கண்டென்ட் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை.
இதன் காரணமாக, இருவரில் ஒருவர் வெளியே சென்றால் நன்றாக இருக்கும் என கூறி வந்த நிலையில், தர்ஷிகா வெளியேறினார்.
கிப்ட்
இந்நிலையில், தர்ஷிகா பிக் பாஸ் வீட்டை விட்டு செல்வதற்கு முன் விஜே விஷாலிடம் அவருடைய அம்மாவின் ஞாபகமாக வைத்திருந்த மோதிரத்தை பரிசாக கொடுத்து விட்டு சென்றுள்ளார்.
அதுபோல், விஜய் சேதுபதி தர்ஷிகாவிடம் ஆரம்பத்தில் உங்கள் விளையாட்டு சிறப்பாக இருந்தது. ஆனால், திடீரென்று உங்கள் விளையாட்டு மாறிவிட்டது அதற்கு காரணம் என்ன தெரியுமா என்று மறைமுகமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது, இவை அனைத்தையும் வைத்து ரசிகர்கள் தர்ஷிகா மற்றும் விஜே விஷால் இடையில் உண்மையாகவே காதல் இருக்குமோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.