சில்க் ஸ்மிதாவை திருமணம் செய்யவிருந்த நபர்.. யார் தெரியுமா

Silk Smitha
By Kathick Apr 28, 2025 03:30 AM GMT
Report

1979ல் தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் சில்க் ஸ்மிதா. காந்த கண்ணழகி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கினார். இவருடைய கால்ஷீட் கிடைத்திராதா என பல தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றுள்ளார்கள். அப்படி மிகப்பெரிய நட்சத்திரமாக வலம் வந்த சில்க் ஸ்மிதா தனது 35 வயதில் மரணமடைந்தார். இவருடைய மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சில்க் ஸ்மிதாவை திருமணம் செய்யவிருந்த நபர்.. யார் தெரியுமா | The Man Who Was Supposed To Marry Silk Smitha

இந்த நிலையில், பிரபல நடன கலைஞர் புலியூர் சரோஜா பேட்டி ஒன்றில் சில்க் ஸ்மிதா திருமணம் செய்யவிருந்த நபர் குறித்து பேசியுள்ளார்.

"ஒருமுறை நான் திருப்பதி செல்வதற்கு 2 நாட்கள் முன்பு, நடிகை சில்க் ஸ்மிதா ஒரு நகை பாக்ஸை கொண்டுவந்து காண்பித்து நான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன் என சொன்னார். அவரிடம் ராதாகிருஷ்ணன் என்பவர் வேலை பார்த்தார். அவரது மகனுக்கும் எனக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக சொல்லி அந்த பையனின் பெயரைத்தான் என்னுடைய காதில் சில்க் ஸ்மிதா சொன்னார் என புலியூர் சரோஜா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.