அதை செய்வதில்தான் உண்மையான மகிழ்ச்சி..இல்லாவிட்டால்!! நடிகை மிருணாள் தாகூர் ஓபன் டாக்..
மிருணாள் தாகூர்
பாலிவுட் சினிமாவில் தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை மிருணாள் தாகூர், டக்கோயிட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது.

வருண் தவான் நடிப்பில் வெளியாகிய Hai Jawani Toh Ishq Hona Hai படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
உண்மையான மகிழ்ச்சி
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், உண்மையான மகிழ்ச்சி என்பது இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்தான் இருக்கிறது. பெரியளவில் இல்லாவிட்டாலும் முடிந்தவரை வறுமையில் இருப்போருக்கு உதவி செய்ய வேண்டும்.
கர்மா மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. செய்யும் உதவிக்கு பலன் எதிர்ப்பார்ப்பதில்லை, அது யாருக்காவது மகிழ்ச்சி தந்தால் போதும் என்று சமீபத்திய நிகழ்ச்சியொன்றில் பகிர்ந்துள்ளார் நடிகை மிருணாள் தாகூர்.