நயன்தாராவை வைத்து இப்படி செய்வாருனு எதிர்பாக்கல? விக்கி குறித்து ஆதங்கமாக அம்மாவின் தோழி

Nayanthara Vignesh Shivan
By Edward Aug 07, 2022 07:45 AM GMT
Report
205 Shares

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. பல ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

பிரம்மாண்ட முறையில் பல கோடி செலவில் திருமணம் நடைபெற்றது. பல நட்சத்திரங்கள் ரசிகர்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஐபிஎஸ் திலகவதி அவர்கள் விக்னேஷ் சிவன் குறித்த ஒரு கருத்தினை கூறியுள்ளனர்.

நயன்தாராவுடைய கணவர் எங்கள் பிள்ளை போன்றவர். விக்னேஷ் சிவனின் அம்மா காவல்துறையில் இருப்பவர் என்பதால் காவத்துறையில் இருக்கும் மற்ற பெண்களின் பிள்ளைகளை எங்கள் பிள்ளை போன்று பார்ப்போம்.

இயக்கம் முதல் எல்லாமே நல்லா பண்ணி வளர்ந்துட்டு வர்றாரு. ஆனால் திருமணத்தை எளிமையாக நடந்த்திருக்கலாம் என்றும் இப்படி ஆடம்பரமாக நடத்துவாருன்னு எதிர்ப்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.