பிரபல நடிகையுடன் நடுரோட்டில் ரொமாண்டிக் ஆட்டம் போடும் தனுஷ்! லீக்கான வீடியோ..
முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து பாலிவுட் ஹாலிவுட் என ரூட்டை மாற்றி சென்று கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் ஆரம்பித்து மாறன் படம் வரை பல சருக்கல்களை சந்தித்தும் வெற்றியை சந்தித்தும் வந்தவர்.
தற்போது மாறன் படத்தின் தோல்விக்கு பிறகு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். யாரடி நீ மோகினி படம் வெளியாகி 12 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.
ராஷிகண்ணா, நித்யாமேனன், பிரியாபவானி சங்கர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் போஸ்டர் சமிபத்தில் வெளியாகியது. போஸ் புரடொக்ஷன் வேலைகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தில் பாடல் விடீயோ காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
எப்படி இந்த காட்சி லீக்கானது என்று படக்குழுவினர் புலம்பி யாரும் பகிர வேண்டாம் என்று கூறியிருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் மற்றுமொரு வீடியோ இணையத்தில் லீக்காகியுள்ளது.
நித்யா மேனனும், தனுஷும் ரொமான்ஸ் செய்து ஆட்டம் போட்ட காட்சி தான் லீக்காகியுள்ளது. போஸ்ட் புரடொக்ஷன் வேலை சென்று கொண்டிருக்கும் நேரத்தில் ஏற்கனவே லீக்கான இந்த வீடியோவை மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Dhanush and Nithya Menon ? pic.twitter.com/koGbl0MQzY
— வசீம் (@Vaseem157) September 6, 2021