வசமாக சிக்கிய கௌதம்.. கவிதாவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். இது சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதம் மீது மகாவிற்கு சந்தேகம் வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது மகா சந்தேகத்துடன் இரவோடு இரவாக ஆபீஸ்க்கு வந்து எரிந்த ஆதாரங்களை தேடி எடுக்க கௌதம் தான் அத்தனையும் செய்தது என்பதை உறுதி செய்து கொள்கிறாள்.

உடனே திவ்யாவுக்கு போன் போட்டு வர வைத்து அவளிடம் விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறாள். அடுத்த நாள் காலையில் கௌதம் மற்றும் கவிதா என இருவரும் ஆஃபீஸ்க்கு சீக்கிரமாக வந்து மகாவும் திருவும் ஒன்றாக இருக்கும் வீடியோவை பரப்ப திட்டமிடுகின்றனர்.
மகா ஆபீஸ்க்கு வர கவிதா இவ எதுக்கு இவ்வளவு சீக்கிரம் வந்து இருக்கா என சந்தேகம் கொள்கிறாள். பின்னாடியே கொஞ்ச நேரத்தில் திரும்பவும் ஆபீஸ் வர கவிதாவின் சந்தேகம் மேலும் அதிகமாகிறது. பின்னாடியே திவ்யாவும் வருகிறாள்.

திருவை சந்தித்த திவ்யா எல்லாத்தையும் செய்தது இந்த ஆபீஸில் வேலை செய்யும் வினோத் ( கௌதம் ) என்ற விஷயங்களை ஆதாரத்துடன் சொல்ல திரு கெளதம் இருக்கும் இடத்திற்கு வந்து லேப்டாப்பை கொடு என்று சொல்ல கௌதம் கொடுக்க மறுக்கிறான். திவ்யா அவனை மரியாதை இல்லாமல் பேசி லேப்டாப்பை பிடுங்கி கொடுக்க இது அதில் இருக்கும் வீடியோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து இவன்தான் எல்லாவற்றையும் செய்தது என்பதை உறுதி செய்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.