நான் இப்படி இறக்க வேண்டும்.. கடைசி ஆசையை கூறி ஷாக் கொடுத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்

Cinema Lead Shah Rukh Khan Actors Bollywood Death
By Bhavya Oct 19, 2024 09:30 AM GMT
Report

பாலிவுட் சூப்பர் ஸ்டார் 

பாலிவுட் சினிமாவை ராஜ்ஜியம் செய்து கொண்டு வருபவர் நடிகர் ஷாருக்கான். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும் ஆவர். இவர் ஒரு நல்ல நடிகர் என்பதை விட ஒரு சிறந்த மனிதர் என்று கூறலாம்.

நான் இப்படி இறக்க வேண்டும்.. கடைசி ஆசையை கூறி ஷாக் கொடுத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் | This Way I Want To Die

இந்நிலையில், ஷாருக்கான் அவர் மரணம் எப்படி நிகழ வேண்டும் என்பதை குறித்து சுவிட்சர்லாந்தில் நடந்த லொகார்னோ திரைப்பட விழாவில் கூறியுள்ளார்.

இந்த விழாவில் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெரும் முதல் இந்தியர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஆசை

விருதை பெற்றுக்கொண்ட ஷாருக்கானிடம், நீங்கள் எப்போதும் நடித்துக் கொண்டே இருக்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு "ஆம், நான் என் மரணத்தை நெருங்கும் வரை நடிக்க விரும்புகிறேன். நான் நடிக்கும்போது யாராவது ஆக்‌ஷன் என்று சொல்ல வேண்டும் அப்போது நான் இறப்பது போல் நடிக்க வேண்டும்.

நான் இப்படி இறக்க வேண்டும்.. கடைசி ஆசையை கூறி ஷாக் கொடுத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் | This Way I Want To Die

ஆனால் கட் சொல்லும்போது நான் மீண்டும் எழுந்திருக்கக் கூடாது அப்படியே இறந்து போக வேண்டும். அது தான் என் வாழ் நாள் ஆசை என்று கூறி அங்கு இருந்த அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.