பிக்பாஸ் ஆரம்பித்து வைத்த ஆட்டம்.. 5 வருட ஏமாற்றத்திற்கு பின் கமல் விசயத்தில் கடிவாளம் போட்ட சங்கர்
தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து 60 ஆண்டுகளாக சினிமாத்துறையில் பல சாதனைகளையும் விருதுகளை பெற்று வருபவர் நடிகர் கமல் ஹாசன். அவர் நடித்த 230க்கும் மேற்பட்ட படங்களில் பல படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
சமீபத்தில் விக்ரம் படத்தில் நடித்து தயாரித்து 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படத்தது. விக்ரம் படத்திற்கு முன்பு கடந்த 2017 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ஆரம்பித்த படம் தான் இந்தியன் 2.
தில் ராஜ் இயக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பித்த நிலையில் ஏ எல் ரத்னம் என் படம் என்று வழக்கு போட, படப்பிடிப்பில் விபத்து, கொரோனா லாக்டவுன், காஜல் அகர்வால் விலகல், விவேக் மரணம் என்று படம் சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேல் தள்ளிப்போயுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு பிக்பாஸ் முதல் சீசனின் இறுதி போட்டியில் சங்கர், கமல்ஹாசனால் பிரம்மாண்ட முறையில் அறிமுகப்படுத்திய படமாக இருந்தது இந்தியன்2. இத்தனை ஆண்டுகள் படம் பிரச்சனைகளை சந்தித்து சங்கருக்கு மிகப்பெரிய அடியை கொடுத்தது.
இதனால் வெறுப்படைந்த சங்கர் அக்கடதேசம் சென்று ராம் சரணின் 15 வது படத்திற்காக சென்றுவிட்டார். அதன்பின் லைக்கா நிறுவனம், ரெட் ஜெயண்ட் வெளியிடப்படவுள்ளதால் இப்படம் சீக்கிரம் ஷூட்டிங் முடியவுள்ளது.
இப்படத்திற்காக 4 இயக்குனர்கள் பணியாற்றவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சங்கர் ஆர்சி 15 படத்தின் வேலைகளில் இருப்பதால் வேலை பலுவை குறைக்க வசந்தபாலன், சிம்பு தேவன், அறிவழகன் என்ற சங்கரின் மூன்று உதவி இயக்குனர்கள் பணியாற்ற இருக்கிறார்கள்.