தக் லைஃப் ’சுகர் பேபி’ பாடல் சர்ச்சை!! இப்படியொரு அர்த்தமா?
இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். கமல் ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸ்யாகவுள்ளது தக் லைஃப் படம்.
இப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது தக் லைஃப் படத்தின் சுகர் பேபி என்ற இரண்டாம் பாடல் வெளியாகியுள்ள்து. திரிஷாவின் கிளாமர் லுக் ஆட்டத்தில் இப்பாடல் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்நிலையில், சுகர் டாடி என்பது இளம் பெண்ணுடன் பொருளாதார, உடல் ரீதியான தேவைக்களுக்காக வாழும் வயதான ஓர் ஆணை குறிக்குமாம். அதேபோல் சுகர் பேபி என்பது வயதான ஆணுடன் பொருளாதார, உடல் ரீதியான தேவைக்களுக்காக வாழும் ஒரு பெண்ணை குறிப்பதாகுமாம்.
இந்த நவீன காலத்தில் குறிப்பாக நகரங்களில் இந்த சுகர் டாடி மற்றும் சுகர் பேபி கலாச்சாரம் அதிகரித்து வருகின்றன. தக் லைஃப் படத்தில் இந்த சுகர் பேபி விஷயமும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.