கப்பலில் ஷூட்டிங்..பால்கனியில் திரிஷா செய்த செயல்!! இயக்குநர் ஓபன் டாக்..
தக் லைஃப்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். கமல் ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸ்யாகவுள்ளது தக் லைஃப் படம்.
இப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது தக் லைஃப் படத்தின் சுகர் பேபி என்ற இரண்டாம் பாடல் வெளியாகி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. படத்தின் பிரமோஷனுக்காக மும்பை சென்றிருக்கும் தக் லைஃப் படக்குழுவினர், பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்கள்.
கே எஸ் ரவிக்குமார்
அந்தவகையில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் எடுத்த ஒரு பேட்டியின் போது திரிஷா மனமதன் அம்பு படத்தின் ஷூட்டிங்கில் நடந்த ஒரு சுவாரஸ்வயமான தகவலை பகிர்ந்திருக்கிறார்.
அதில், மன்மதன் அம்பு படத்தின் ஷூட்டிங் கப்பலில் நடந்தது. அப்போது மூன்று ரூமில் தனித்தனியா திரிஷா, கமல், நான் தங்கியிருந்தோம். அப்போது நடுராத்திரி 3 மணிக்கு, பால்கனியில் திரிஷா, இந்த உலகத்தின் குயின் நான் தான் என்று கத்தினார்.
அதை பார்த்து நான் ஷாக்காகினேன். அதை நினைத்தபடியே, பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கும் போது அது நிஜமாகிவிட்டதே என்று ஆச்சரியப்பட்டேன் என்று கே எஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
அதற்கு திரிஷா, டைட்டானிக் படத்தில் ஹீரோ - ஹீரோயின் பண்ணுவதை போல் பண்ணிப்பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார்.