வாரிசு-க்கு போட்டியாக லீக்கான அஜித்தின் துணுவு சிங்கிள்!! கோபத்தில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக திகழ்ந்து வரும் நடிகர்கள் அஜித், விஜய். இருவரின் நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு படங்கள் வரும் 2023 ஜனவரி 12 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
படம் ஆரம்பித்தது முதல் ரிலீஸ் தேதி வெளியாகும் வரை அஜித், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் பல விசயங்களை செய்து வருகிறார்கள். இதற்கிடையில் விஜய் அஜித்தும் படக்குழுவுடன் பல காரியங்களை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் பட்டையை கிளப்பி வரும் நிலையில் துணிவு படத்தின் பாடல் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர் படக்குழு. இந்நிலையில் வாரிசு படத்தின் லீக் வீடியோ புகைப்படங்களை போலவே துணிவு படத்தின் முதல் பாடலின் வரிகள் லீக்காகியுள்ளது.
“என்னைக்குமே படைச்சவன் துணை நமக்கு..மனசுல போராட துணிவிருக்கு” என்ற வரிகள் இணையத்தில் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.