இந்தியாவில் 2024-ல் அதிக நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியலில் யார் முதலிடம்!! அதுவும் இத்தனை கோடியா?
முகேஷ் அம்பானி
இந்தியாவின் டாப் பணக்காரர்கள் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, மும்பையின் மையத்தில், நகரின் மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றில், அவரது குடும்பத்தினருடன் 27 மாடி கொண்ட ஆண்டிலியா வீட்டில் வசித்து வருகிறார்.
ஆண்டிலியா வீட்டை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்த வீட்டில் பல ஆடம்பர வசதிகள் இருக்கிறது. அந்த வீட்டில் சுமார் 600 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்காக நாளொன்றுக்கு சுமார் 4 ஆயிரம் ரொட்டிகள் தயாரிக்கப்படுவதாக புது தகவல் வெளியானது.
டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட 100 நன்கொடையாளர்கள்
இந்நிலையில், டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட 100 நன்கொடையாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் அதிக நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியலில் யார் முதல் இடத்தில் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் எப்படி முகேஷ் அம்பானி இருக்கிறாரோ, அதேபோல் 2024 ஆம் ஆண்டின் அதிக நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதி முதல் இடத்தை பிடித்துள்ளார்கள்.
கல்வி உதவி, பெண்கள் முன்னேற்றத்திற்கு தேவையான உதவிகளை வழங்குதல், கிராமப்புற மேம்பாடு, வேளாண்மை உதவி, நீர்நிலைகளை பாதுகாத்தல், மருத்துவமனை கட்டுவதற்கான உதவி என, ஒரே ஆண்டில் ரூ. 407 கோடி நன்கொடை வழங்கி இருப்பதாக டைம் இதழ் கூறியுள்ளது.
மேலும் விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஆசிம் பிரெம்ஜி நன்கொடை வழங்கிய நபர்களில் ஒருவராக இருக்கிறார். மேலும், டேவிட் பெக்கம், மைக்கேல் ப்ளூம்பெர்க், ஒபரா வின்ப்ரே, மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், வாரன் பபெட், ராபர்ட் ஸ்மித், ஜேக் மா உள்ளிட்ட இந்தியர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.