யாரிடம் பரிசு வாங்கனும்னு ஒரு விவஸ்தை இல்லையா!! பிரபல நடிகரை கண்டபடி பேசிய பத்திரிக்கையாளர்
தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நடிகராக திகழ்ந்து வரும் ஒரு நடிகர் பல கோடி செலவு செய்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அரசியல் நோக்கத்தோடு பல விசயங்களையும் அவர் தன் ரசிகர்கள் மூலம் செய்தும் வருகிறார்.
இதை அவர் அப்பா ஆரம்பித்து வைத்த போது, அவரையே ஒதுக்கும் நிலைக்கு வந்துவிட்டார் என்ற விமர்சனமும் அந்த நடிகர் மீது எழுந்துள்ளது. சமீபத்தில் அந்த நடிகர் முதல் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசும் வழங்கினார். இந்நிலையில் அந்த நடிகர் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் விமர்சித்து பேசியிருக்கிறார்.
ஒரு நிருபரை சமீபத்தில் அந்தித்த போது, ஒரு நடிகரை பேட்டி எடுக்கச் சென்ற போது , கேள்விகள் கேட்க ஆரம்பித்ததும் அவர் சொன்னாராம்.
உங்கள் மகன் / மகள் முதல் மார்க் எடுத்திருக்கிறான். ஒரு சினிமா நடிகர் வேன் வைத்து பரிசு வழங்க அழைக்கிறார் என்றால் ,உங்கள் குழந்தைகளை இளித்துக்கொண்டு அனுப்பி விடுவீர்களா? குழந்தைகள் யாரிடம் பரிசு பெற வேண்டும் என்பதில் ஒரு விவஸ்தை இல்லையா ?
"ஏண்ணா , உங்களுக்குத் தெரியாததா ? நீங்களே பாத்து கேள்வி எழுதி , நீங்களே நல்ல பதிலா ,எப்டி எழுதினா எனக்கு நல்லதோ , அப்டி எழுதிக்கோங்கண்ணா , நமக்கு என்னண்ணா தெரியும் ?" அப்படித்தான் அந்த நடிகரின் பேட்டி வந்தது. என்று ஆரம்பித்துள்ளார் அந்த பத்திரிக்கையாளர்.
மேலும் அந்த நடிகர் சமீபத்தில் செய்த செயல்கள் பற்றி விமர்சித்த அவர், ஏனய்யா ? அதிமுக சரியில்லை , திமுக சரியில்லை என்றால் ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாத சினிமா நடிகரிடம் போய் சரணாகதி அடைந்து , எங்களை ஆட்சி செய்யுங்கள் என உங்கள் தலை மேல் அவர் காலை வைக்கச் சொல்வீர்களா ? வெட்கமாக இல்லை ? என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், பொலிட்டிக்கலி கரக்டான ஆட்கள். யார் அழைத்தாலும் எங்கள் குழந்தைகளை அனுப்புவோம் என்பவர்களா நீங்கள் ? அப்படி எனில் சன்னி லியோன் அழைத்தாலும் அனுப்ப வேண்டும். ஏனெனில் அவரும் ஒரு ப்ரொஃபஷனலான ஆக்டர் தான். என்று கூறியும் இணையத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.