நடிகைகளை நம்ப வைத்து ஏமாற்றிய ரஜினி, அஜித், சிவகார்திகேயன்.. கேரியரையே தொலைத்த சம்பவம்
தமிழ் சினிமாவில் சில நடிகைகள் முன்னணி இடத்திற்கு வளர்ந்து வரும் நிலையில் சில ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்து அவர்களின் கேரியரை தொலைத்த நடிகைகளின் லிஸ்ட் பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
பிரபல இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார்.
இதற்கு முன்பு வரை ஐஸ்வர்யா ராஜேஷ் பல வெற்றி படங்களை கொடுத்தார். ஆனால் 'நம்ம வீட்டு பிள்ளை' படத்திற்கு பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் தோல்வியை தழுவியது.

லட்சுமி மேனன்
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2015 -ம் ஆண்டு வெளியான வேதாளம் படத்தில் நடிகர் அஜித்திற்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருப்பார்.
இப்படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது இருப்பினும் இப்படத்திற்கு பிறகு லட்சுமி மேனனுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கீர்த்தி சுரேஷ்
கடந்த ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் 2021 -ம் ஆண்டு வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
இதற்கு முன்பு கீர்த்தி சுரேஷ் பல முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது.