நடுத்தெருவிற்கு வந்த பிரபல இயக்குநர்! அதற்கு காரணமான இரு நடிகர்கள் இவர்கள் தானா?

suriya kamalhaasan anjaan n lingusamy
By Edward May 14, 2021 11:00 AM GMT
Report

சினிமாவை பொருத்தவரையில் நடிகர்கள் நடிகையானாலும் சரி இயக்குநர் தயாரிப்பாளர்கள் ஆனாலும் சரி படம் சரியாக ஓடாமலும் வசூல் விமர்சனம் அடிப்பட்டாலும் அவர்கள் காணாமல் போகும் நிலை வரும். அதில் தற்போது தள்ளப்பட்டிருப்பவர் தான் பிரபல இயக்குநர்.

2001ல் ஆனந்தம் படத்தின் வெற்றிக்கு பிறகு ரன், சண்டக்கோழி உள்ளிட்ட ஆரம்பகால படங்கள் மூலம் பெரிய ஹிட் கொடுத்து பேசப்பட்டவர் இயக்குநர் லிங்குசாமி. இதையடுத்து பீமா படத்தை அடுத்து பையா, வேட்டை அஞ்சான் உள்ளிட்ட படங்களை இயக்குவதோடு அவரே தயாரித்தும் வந்தார். இயக்குனராக இருக்கும் வரை லிங்குசாமி சந்தோசமாகத்தான் இருந்தாராம்.

ஆனால் என்னைக்கு தயாரிப்பை கையில் எடுத்தாரோ அன்னைக்கு பிடித்தது சனி என்கிறார்கள். முதலில் மினிமம் பட்ஜெட் படங்களை தயாரித்து வந்ததால் நல்ல இலாபம் பார்த்து வந்தாராம் லிங்குசாமி.

கமல்ஹாசன் படத்தை தயாரித்தது தான் அவருக்கு பெரிய அடியாக அமைந்துவிட்டதாம். மேலும் சூர்யாவின் அஞ்சான் படம் படுமோசமான விமர்சனத்தால் தோல்வியடைந்ததும் ஒரு காரணமாக அமைந்தது. அஞ்சான் என்ற தோல்விப் படத்தை கொடுத்து பீல்ட் அவுட் இயக்குனராக மாறி தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் சென்றுவிட்டாராம்.