அஜித்தின் வளர்ச்சிக்கு புது பரிமாணத்தை உருவாக்கி அஸ்திவாரம் போட்ட படங்கள்!! காதல் மன்னன் ஆச்சே!!

Ajith Kumar
By Edward Mar 22, 2023 04:00 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார் தற்போது துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு ஏகே 62 வது படத்தின் ஷூட்டிங்கிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில் அஜித் தற்போது தன் மனைவி பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மாஸ் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் ஒரு காலக்கட்டத்தில் காதல் மன்னனாகவும் ஜாக்லெட் பாயாகவும் திகழ்ந்து வந்தார்.

அப்படி அஜித்தின் சினிமா வாழ்க்கையை புரட்டிப்போட அஸ்திவாரம் போட்ட படங்கள் லிஸ்ட் தற்போது வெளியாகியிருக்கிறது.

அதில் முதலாவதாக முக்கிய பங்கு வகிக்கும் படம் ஆசை. அப்படத்தில் வரும் காதல் காட்சிகள் இன்றுவரை ரசிகர்களால் மறக்கமுடியாத அளவிற்கு வெற்றிபடமாக அஜித்திற்கு கொடுக்கப்பட்டது.

இதனை அடுத்து காதலை மையமாக வைத்து வெளிவந்த காதல் கோட்டை, உல்லாசம், காதல் மன்னன், அவள் வருவாளா, வாளி, ஆனந்த பூங்காற்றே, அமர்களம், முகவரி போன்ற படங்கள் இதுவரை அஜித் வாழ்க்கையில் மறக்கமுடியாத படங்களாக அமைத்துக்கொடுத்தது.

இதனை தொடர்ந்து மாஸ் நடிகராக மாறி வேறொரு பரிமானத்தையும் ஆரம்பித்தார் அஜித் குமார்.