விஜய்க்கு முன் அஜித்தை அரசியலுக்கு கொண்டுவர முயன்றேன்..ஆனால்!! பிரபல ஜோதிடர் சொன்ன ரகசியம்..
ரிக்கி ராதன் பண்டித் வெற்றிவேல்
தமிழக வெற்றிக் கழகத்தி செய்தி தொடர்பாளரும், விஜய்யின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டித் வெற்றிவேல், முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, பின் எதிர்ப்பு கிளம்பியதால் வாபஸ் பெறபட்டது.

ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டித் வெற்றிவேல் அளித்த பேட்டியொன்றில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதில் அஜித்தின் ஜாதகம் மிகவும் சிறப்பாகவுள்ளது. அதிர்ஷ்டசாலி, அறிவாளி, பிடிவாத குணமுடையவர், இறுக்கமான சிந்தனை கொண்டவர், அதிகம் யோசிப்பவர், உழைப்பு என்றால் என்னவென்று தெரியும்.

அஜித்தை அரசியலுக்கு கொண்டுவர முயன்றேன்
16 வயதிற்கு முன் அவருக்கு நிறைய விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதன்பின்பும் அவருக்கு விபத்து ஏற்பட்டது. எத்தனை விபத்துகள் ஏற்பட்டாலும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிலிருந்து மீண்டு வரக் கூடியவர் அஜித். கிட்டத்தட்ட எம் ஜி ஆர் சாயலில் ஒருவர் சினிமாவில் இருக்கிறார் என்றால், அது அஜித் தான்.
பார்வையாளர்களை கவரும் அனைத்து அம்சமும் அஜித்துக்கு உண்டு, முதல்வராகும் அனைத்து அம்சங்களும் அஜித்துக்கு உண்டு, ஆனால் அவர் சினிமாவைவிட்டு அரசியலுக்கு வரவாய்ப்பு மிகவும் குறைவு. நடக்காமலும் போகலாம். இவரைப் போல் ஒருவரை யாராலும் பார்க்க முடியாது.

அவர் அரசியலுக்கு வந்தால், அதைவிட நல்ல காரியம் இருக்காது, ஆனால் அவர் வர வாய்ப்பில்லை. அஜித்தை அரசியலுக்கு கொண்டு வர முயற்சித்தேன். அஜித் தரப்பில் இருந்து அவருக்கு அரசியலில் விருப்பம் இல்லை என்று தெரிவித்தனர். அதனால் நான் அவரைவிட்டு வந்துவிட்டேன். புத்தியசாலியான அவர், அரசியலுக்கு வரமாட்டார் என்று தோன்றுகிறது என்றார் ரிக்கி ராதன் பண்டித் வெற்றிவேல்.