கருப்பு படம் ரிலீஸ்!! ரசிகர் கேள்விக்கு வெட்கப்பட்டு திரிஷா கொடுத்த ரியாக்ஷன்..
கருப்பு படம்
இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் தான் கருப்பு. வில்லனாக நடித்துள்ள ஆர்ஜே பாலாஜியின் கருப்பு படம் நேற்று மே 14 ஆம் தேதி ரிலீஸாகும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் ஃபைனான்ஸ் பிரச்சனையால் இன்று படம் ரிலீஸானது.

படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை விமர்சனத்தையும் பெற்று வருகிறது. படத்தில் கதாநாயகியாக நடித்த திரிஷா, ரோகினி திரையரங்கிற்கு சென்று முதல்நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்துள்ளார்.
திரிஷா ரியாக்ஷன்
கருப்பு படத்தின் நல்ல விமர்சனத்தோடு காரில் வெளியேறினார் திரிஷா. அப்போது ரசிகர் ஒருவர் திரிஷாவிடம், தளபதியை கேட்டேன்னு சொல்லுங்க என்று கேட்டுள்ளார்.
அதற்கு திரிஷா, கண்டிப்பா என்று கூறியதோடு அடக்கமுடியாத சிரிப்போடு தன்னுடைய ரியாக்ஷனை கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
"Thalapathy ah kettenu sollunga"
— Deepu (@deepu_drops) May 15, 2026
Trisha replies, "Kandipa" 😅❤️ pic.twitter.com/CLZUTP3QIn