நடிகை த்ரிஷாவா இது! நடிக்க வருவதற்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்க
Trisha
Actress
By Karthick Raja
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் த்ரிஷா. விஜய்யுடன் லியோ படத்தில் ஜோடியாக நடித்ததை தொடர்ந்து, கோட் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
இதை தொடர்ந்து அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். மேலும் தக் லைஃப் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகை த்ரிஷா, நடிக்க வருவதற்கு முன் மாடலின் துறையில் இருந்தார்.

மேலும் மிஸ் சென்னை பட்டத்தை வென்றுள்ளார். 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்றுள்ளார் நடிகை த்ரிஷா.
இந்த நிலையில், நடிகை த்ரிஷா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும், நம்ம த்ரிஷாவா இது என கேட்டு வருகிறார்கள். புகைப்படத்தை நீங்களே பாருங்க..

