அஜித் ஷூட்டிங்கில் இருந்து பாதியில் கிளம்பிய திரிஷா!! இதுதான் காரணமாம்..
விடாமுயற்சி - குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித், இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்திருக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார்.
இப்படத்தினை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தின் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் நடிகை திரிஷா மீண்டும் அஜித்துடன் இணைந்து நடித்து வருகிறார்.
நடிகர் பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறார்.
திரிஷா
விறுவிறுப்பாக ஷூட்டிங் சென்று கொண்டிருக்கும் நிலையில் படத்தின் கதாநாயகி நடிகை திரிஷா ஷூட்டிங்கில் இருந்து சென்னைக்கு வந்துள்ளாராம்.
விசாரித்ததில், சென்னையில் நடக்கும் ஜிஆர்டி நகைக்கடையின் விளம்பரத்தில் நடிக்க திரிஷா வந்திருக்கிறாராம். ஜிஆர்டி நகைக்கடையின் பிராண்ட் அம்பாஸ்டராக இருப்பதால் அதன் விளம்பரத்தில் நடிக்க சென்னைக்கு வந்துள்ளாராம் திரிஷா.
மீண்டும் இந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு குட் பேட் அக்லி படத்தின் ஸ்பெயின் ஷூட்டிங்கில் திரிஷா கலந்து கொள்வாராம்.