இது மட்டும் நடக்காம இருந்திருந்தா, திரிஷா வாழ்க்கை மொத்தமா..!!

Trisha Actress
By Kathick Feb 21, 2024 06:30 AM GMT
Report

திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் குறித்து சமீபகாலாமாக பல சர்ச்சைகள் எழுந்து வந்தாலும், அதற்கெல்லாம் சரியான பதிலடி கொடுத்து வருகிறார்.

விஜய்யின் லியோ படத்தை தொடர்ந்து தற்போது கமலின் தக் லைஃப் மற்றும் அஜித்தின் விடாமுயற்சி என பிசியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டும் நடக்காம இருந்திருந்தா, திரிஷா வாழ்க்கை மொத்தமா..!! | Trisha Decided To Quit Cinema

திரிஷாவின் ஆரம்பகால கட்டத்தில் சில படங்கள் தோல்வியை சந்தித்ததன் காரணமாக, சினிமாவில் இருந்து விலகி விடலாம் என்கிற மோசமான முடிவை எடுத்துள்ளாராம். அப்போது தான் இவரை தேடி சாமி படத்தின் வாய்ப்பு வந்துள்ளது. விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமி படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.

சாமி படம் வெற்றியடைந்தால் சினிமாவில் தொடர்ந்து இருக்கலாம், இப்படம் தோல்வியை தழுவினால், சினிமாவிற்கு ஒரு பெரிய கும்பிட்டு போட்டுவிட்டு சென்றுவிடலாம் என முடிவு எடுத்துள்ளார். படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அதன்பின் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இது மட்டும் நடக்காம இருந்திருந்தா, திரிஷா வாழ்க்கை மொத்தமா..!! | Trisha Decided To Quit Cinema