சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா? அடுத்து விஜய் கட்சியா..ரசிகர்கள் கேள்வி
த்ரிஷா
தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. 22 ஆண்டுகள் சினிமாவில் கடந்துள்ள இவர், விஜய், அஜித் போன்ற நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகை த்ரிஷா, அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் ஒரு முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் கேள்வி
அதாவது, இனி நடிக்கப்போவதில்லை என்றும் சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
தற்போது விஜய் அரசியல் கட்சி துவங்கி சினிமாவிலிருந்து விலகி முழுமையாக அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த நிலையில், த்ரிஷா குறித்து தற்போது வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
அதாவது, த்ரிஷா விஜய்யின் அரசியல் கட்சியில் இணையப்போகிறாரா? அதன் காரணமாக தான் அவர் சினிமாவில் இருந்து விலகுகிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.