இனி புதுபடம் வேண்டாம்! 38 வயசில் விரைவில் திருமணம் செய்கிறாரா நடிகை திரிஷா?

marriage trisha tamilactress
By Edward Aug 29, 2021 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகையாக தற்போது வரை இருந்து வருபவர் நடிகை திரிஷா. நடிகர் பிரசாந்தின் ஜோடி படத்தில் நடிகை சிம்ரனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானாவர் நடிகை திரிஷா. இதையடுத்து மெளனம் பேசியதே படத்தில் அறிமுகமாகி விஜய், அஜித், விக்ரம், கமல், சூர்யா போன்றவர்களுடன் நடித்து முன்னணி நடிகையாகினார்.

இதன்பின் காதல் நிச்சயதார்த்தம், தோல்விகள் என்று மன உளைச்சலில் இருந்து படங்களை தவிர்த்து வந்தார். மீண்டும் 96 படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து மீண்டும் தன் இடத்தை பிடித்தார். தற்போது சதுரங்க வேட்டை 2, ராங்கி, கர்ஜனை உள்ளிட்ட பல படங்கள் வெளியாக காத்து கிடக்கிறது. மேலும் இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் கமிட்டாகி நடித்து வரும் திரிஷா இறுதி படப்பிடிப்பினை எட்டியுள்ளது.

இதையடுத்து புது படங்களில் கமிட்டாக போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் திருமணம் நடக்க இருப்பதாகவும் புதுபடங்களில் நடித்தால் திருமணம் தள்ளிப்போகும் என்பதால் இப்படியொரு முடிவெடுத்திருக்கிறார் நடிகை திரிஷா.