மறைமுகமாக சாதிப்பெயரை கூறிய நடிகை திரிஷா!! பெரியவிசயமாக்கிய நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் மெளனம் பேசியதே படத்தின் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை திரிஷா. அதன்பின் தமிழ், தெலுங்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த திரிஷா இடையில் நிச்சயம் வரை சென்று நின்று போன திருமணத்தாலும் காதல் கிசுகிசு போன்ற சர்ச்சைகளாலும் மார்க்கெட்டை இழந்தார்.
அதன்பின் பல ஆண்டுகள் கழித்து 96 படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து தன் இடத்தினை நிரப்பினார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
தற்போது அவர் நடிப்பில் ராங்கி என்ற படம் சமீபத்தில் தியேட்டரில் வெளியாகியது. அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக பேட்டி கொடுத்து பல விசயங்களை பகிர்ந்து வந்தார்.
அதில் பிடித்த உணவு என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த திரிஷா, எப்போதும் பிராமின் சவுத் இந்தியன் உணவு என்றால் என் வீட்டில் செய்யும் உணவு தான் என்றும் நார்த் இந்தியன் என்றால் ரெஸ்ட்டாரண்டில் தான் ஆர்டர் செய்து சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் தான் ஒரு பிராமின் சமுகத்தை சார்ந்தவர் என்று திரிஷா மறைமுகமாக கூறியுள்ளது ரசிகர்களை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
