விஜய்யா? அஜித்தா? யாருக்கு அதிகம்.. நடிகை த்ரிஷா எடுத்த முடிவு

Ajith Kumar Vijay Trisha
By Karthick Raja Oct 18, 2024 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருடனும் அதிக படங்களில் இணைந்து நடித்தவர் நடிகை த்ரிஷா.

கடந்த ஆண்டு லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இதன்மூலம் 5 திரைப்படங்களில் விஜய்யுடன் கைகோர்த்தார். அதை தொடர்ந்து கோட் படத்தில் விஜய்யுடன் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

விஜய்யா? அஜித்தா? யாருக்கு அதிகம்.. நடிகை த்ரிஷா எடுத்த முடிவு | Trisha Rating For Vijay And Ajith

மேலும் தற்போது அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் த்ரிஷா அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்த பேட்டியில், நடிகர்களுக்கு 100க்கு எத்தனை மதிப்பெண்கள் த்ரிஷா கொடுப்பார் என கேள்வி கேட்கப்பட்டது. அதில் நடிகர் விஜய்க்கு 20 என்றும், அஜித் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என தெரிவித்துவிட்டு 80 என்றும் கூறியுள்ளார்.