எக்கச்சக்க வதந்திகள்.. திரிஷா வாழ்க்கையை புரட்டி போட்ட நடிகர்கள்! இந்த லிஸ்டில் இவரா?
தன்னுடைய சினிமா வாழ்க்கையை 22 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. ஜோடி படத்தின் மூலம் ஆரம்பித்து தற்போது வரை ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் பல பிரபலங்கள் அவரை வைத்து பல சர்ச்சையான சம்பவங்களை கூறி அதிர்ச்சியாக்கி வருகிறார்கள்.
ஆனால் திரிஷா அதற்கு முற்றுப்புள்ளி வைத்து புகார்களும் கொடுத்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்கையில், நடிகை திரிஷாவிற்கு கெமிஸ்டி ஒர்க்கவுட் ஆகும் நடிகர் என்றால் அது விஜய் தான். அதை விட பல ஆண்டுகளுக்கு பின் ஜோடி சேர்ந்த லியோ படம் தான் இருவருக்குமான நெருக்கம் அதிகரித்ததாக செய்திகள் பரவியது. இதனால் தான் மனைவி சங்கீதாவை விஜய் பிரிந்ததாகவும் வதந்தி பரவியது.
பல ஆண்டுகளுக்கு முன், திரிஷாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய இடி விழ காரணமாக இருந்தவர் ராணா. மேடையில் கூட சென்னை வந்தால் திரிஷா வீட்டிற்கு தான் முதலில் செல்வேன் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் நடிகர் ராணா. அப்படியொரு காதலில் இருவரும் ஜோடியாக சுற்றித் திரிந்தனர்.
ஜெஸ்ஸி ஜெஸ்ஸி என்று படம் முழுக்க புலம்பி வந்த நடிகர் சிம்புவும் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் போது இருவருக்கும் இருந்த கெமிஸ்டியை பார்த்து அவர்களின் வீட்டாரே இது காதல் தான் என்று நம்பினார்கள்.
இது ஆரம்பித்து சில காலமே தொழிலதிபருடன் காதல் என்று திரிஷா செல்ல நிச்சயம் வரை சென்று திருமணம் நின்றுள்ளது. இதற்கு காரணமே திரிஷாவின் பிளாஸ்பேக் காதல் கதை தானாம். தன்னுடன் நடித்த நடிகைகளை தன் வலையில் சிக்க வைப்பது நடிகர் தனுஷின் தீராத வேலையாக இருந்தது.
கொடிப்படத்தின் போது இருவரும் நெருக்கமாக பழகி வந்தார்கள் என்று கூட செய்திகள் பரவியது. இடையில் பல நடிகர்கள் நட்சத்திரங்களுடன் சேர்ந்து மது பார்ட்டியிலும் கலந்து கொண்ட புகைப்படம் லீக்கானது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நடிகை திரிஷா அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நான் தான் என்ற குறிக்கோளுடன், அஜித், கமல், பாலிவுட் நடிகர்கள் உள்ளிட்டவர்கள் நடிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.