சிம்பு, விக்ரம் யார் பிடிக்கும்.. எனக்கு வேற ஆள் பிடிக்கும்.. நடிகை திரிஷா!!

Silambarasan Vikram Trisha Viral Video
By Edward Sep 12, 2024 10:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வரம்பா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சிம்பு, விக்ரம் யார் பிடிக்கும்.. எனக்கு வேற ஆள் பிடிக்கும்.. நடிகை திரிஷா!! | Trisha Simbu Vikram Fun Video Viral Social Media

ஆரம்பகாலக்கட்டத்தில் திரிஷா பல சர்ச்சைகளிலும் பிரச்சனைகளிலும் சிக்கி வந்தார். அந்தவகையில் திரிஷா ஒரு நிகழ்ச்சியின் போது சிம்பு, விக்ரமுடன் கலாட்டா செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் தொகுப்பாளர் திரிஷாவிடம், உங்கள் அளவிற்கு யாரும் டான்ஸ் ஆடமாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பக்கம் வந்த விக்ரம், அவர் டான்ஸ் பண்ண எல்லாமே அய்யய்யோ அய்யய்யோ பிடிச்சிருக்கு என்றும் சிம்பு அவங்க எந்த பாட்டுக்கு ஆடுனாலும் நல்லா இருக்கும் என்றும் புகழ்ந்தனர்.

சிம்பு, விக்ரம் யார் பிடிக்கும்.. எனக்கு வேற ஆள் பிடிக்கும்.. நடிகை திரிஷா!! | Trisha Simbu Vikram Fun Video Viral Social Media

பின் விக்ரம், சிம்பு இருவரின் யார் நன்றாக நடனமாடுவார் என்ற கேள்விக்கு நடிகை திரிஷா, கேமராவையும் மைக்கையும் மூடுங்கள் நான் சொல்கிறேன் ரெண்டு பேரும் இல்லை எனக்கு வேற ஆளத்தான் பிடிக்கும் என்று திரிஷா கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் தற்போது டிரெண்ட்டாக, அது விஜய் தான் என்று கலாய்த்தபடி கருத்துக்களை நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.