சர்ச்சைக்குள்ளான கதாபாத்திரம்.. படத்தில் காத்திருக்கும் ஷாக்.. நடிகை த்ரிஷா ஓப்பன் டாக்
Trisha
Thug Life
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. இவர் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தக் லைஃப்.
இப்படத்தின் டிரைலர் மற்றும் சுகர் பேபி பாடலில் த்ரிஷா நடனமாடி இருந்த நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்து பல சர்ச்சைகள் சமூக வலைத்தளத்தில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து த்ரிஷாவிடம் ப்ரோமோஷன் இன்டர்வியூவில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் மிகவும் கூலாக பதிலளித்துள்ளார்.
"இதுவரை படத்திலிருந்து ஒரு 2 நிமிட காட்சிகளை தான் பார்த்துள்ளீர்கள். அதற்கே இப்படி ஷாக் ஆனால் எப்படி? படத்தை பார்த்தால் இன்னும் நிறைய ஷாக் ஆவீங்க. படம் ஜூன் 5ம் தேதி வெளியாகுது. அதற்கு பின் என் கதாபத்திரம் குறித்து பேசலாம்" என கூறியுள்ளார்.