சூப்பர் ஸ்டார் படத்தினை அந்த நடிகருடன் பார்க்க சென்ற திரிஷா.. வைரலாகும் புகைப்படம்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, தற்போது விடாமுயற்சி, தங்க் லைஃப், ராம், Identity, விஸ்வாம்பரா உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஒருசில புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். சமீபகாலமாக திரிஷா பற்றிய சர்ச்சையான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மன்சூர் அலிகான் முதல் அரசியல் பிரமுகர் வரை திரிஷாவை பற்றி கொச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இதனைதொடர்ந்து நடிகர் விஜய்யுடன் கிசுகிசுக்கப்பட்டும் திரிஷாவுக்கு பல கோடியில் பங்களா, கார், நெக்லெஸ் வாங்கி கொடுத்ததாகவும் செய்திகள் வெளியானது. இதேபோல் நடிகர் தனுஷுடன் திரிஷா கிசுகிசுவில் சில ஆண்டுகளுக்கு முன் சிக்கினார்.
என்ன தான் மனைவியை பிரிந்து மாமனார் ரஜினியிடம் பேசாவிட்டாலும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகராக முதல் நாள் முதல் காட்சியை ரோஹினி திரையரங்கில் பார்த்துள்ளார். அப்போது நடிகர் தனுஷ், நடிகை திரிஷாவுடன் தியேட்டரில் படம் பார்த்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தந்த நேரத்தில் நடித்து வரும் படத்தின் கதாநாயகிகளுடன் தனுஷ் படம் பார்க்க செல்வது வழக்கம்.
அப்படி பேட்ட படத்தின் போது இருவரும் இணைந்து படம் பார்த்திருக்கிறார்கள். இதனை ரசிகர்கள் இணையத்தில் கசியவிட்டு கலாய்த்தும் வருகிறார்கள்.