குருவுக்காக தலையாட்டிய இடத்தில் அசிங்கப்பட்ட சூப்பர் ஸ்டார்.. வைராக்யத்தோடு காரியத்தை சாதித்த ரஜினிகாந்த்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மிகப்பெரிய இடத்தினை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவரில் ஒருவர் கே பாலச்சந்தர். அவர் இருக்கும் முன்பு வரை அவர் என்ன சொன்னாலும் ரஜினிகாந்த், தட்டாமல் அதை செய்து முடிப்பார். அப்படி அண்ணாமலை படத்தில் நடந்த சம்பவம் குறித்த ஒரு தகவலை முத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை படத்தின் போது, அக்கதைக்காக ரஜினியிடம் கே பாலசந்தர் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நடிக்க கூறியிருக்கிறார். ரஜினியும் ஓகே சொல்லி கதையை கேட்டிருக்கிறார். ஆனால் கதை பிடிக்காமல் போக வேறுமாதிரியாக யோசிக்க சொல்லியதால் வசந்த் விலகிவிட்டார்.
இதனால் வசந்திற்கு பதில் சுரேஷ் கிரிஷ்ணாவை வைத்து படத்தினை இயக்க முடிவெடுத்து ரஜினிகாந்த் கூறிவிட்டு டைட்டிலை நீயே சொல் என்று கே பாலசந்தருடம் கேட்டுள்ளார். பெரும்பாலான பாலசந்தர் படங்களுக்கு ரஜினிகாந்த் தான் டைட்டிலை தேர்வு செய்வதை போல் அப்படத்திற்கும் அண்ணாமலை என்று பெயரை கூறியிருக்கிறார்.
இதை கேட்ட சுற்றி இருந்தவர்கள் சிரித்து கேலி செய்ததோடு அண்ணாமலைக்கு அரோகரா என்றும் கிண்டல் செய்தும் வந்துள்ளனர். ஆனால் ரஜினி படத்தின் டைட்டில் அந்த டைட்டில் தான் என்று உறுதியாக இருந்துள்ளார்.
அதன்பின் படம் எடுக்கப்ப்ட்டு அந்த பெயர் நன்றாகவே படத்திற்கு பொருத்தமாக அமைந்து வெற்றியும் பெற்றது என செய்யாறு பாலு பேட்டியில் தெரிவித்துள்ளார்.