என்னடா வீட்ல அடிக்கிறீங்க.. டி.டி.எப் வாசனுக்கு வந்த அடுத்த சோதனை!

Actors
By Karthick Raja Oct 01, 2024 01:30 PM GMT
Report

பைக் ஓட்டுவதன் மூலம் பிரபலமானவர் டி.டி.எப் வாசன். இவர் தனக்கு தானே சூன்யம் வைத்துக்கொள்வது போல் பல செயல்கள் செய்து காவல் துறையில் சிக்கி வந்தார்.

தொடர்ந்து பல்வேறு விதமாக கைதான டி.டி.எப் வாசன், கடந்த ஆண்டு தான் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவதாக அறிவித்து இருந்தார். அப்படத்திற்கு மஞ்சள் வீரன் என தலைப்பும் வைக்கப்பட்டது.

இப்படத்தை செந்தில் என்பவர் இயக்கவிருந்தார். இப்படத்திற்கான வேலைகள் நடந்து வருவதாக தகவல் வெளிவந்த நிலையில், தற்போது படத்திலிருந்து டி.டி.எப் வாசனை நீக்கிவிட்டதாக ஷாக்கிங் தகவலை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

என்னடா வீட்ல அடிக்கிறீங்க.. டி.டி.எப் வாசனுக்கு வந்த அடுத்த சோதனை! | Ttf Vasan Kicked Out For Manjal Veeran Movie

இதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் செந்தில் மஞ்சள் வீரன் படத்திலிருந்து ஹீரோவாக நடிக்கவிருந்த டி.டி.எப் வாசன் நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது டி.டி.எப் வாசன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பைக் ஓட்டினாலும் கைது, கார் ஓட்டினாலும் கைது என பல்வேறு விதங்களில் கைது செய்யப்பட்டு வந்த டி.டி.எப் வாசனுக்கு தற்போது ஹீரோவாக நடிக்கவிருந்த முதல் பட வாய்ப்பும் கையைவிட்டு போய்யுள்ளது.