வெந்து தணிந்தது காடு மஞ்சள் வீரன்-க்கு வணக்கத்த போடு!! ஹீரோவாகும் கூல் சுரேஷ்..

Actors Tamil Actors Cool Suresh
By Edward Oct 14, 2024 01:30 PM GMT
Edward

Edward

Report

மஞ்சள் வீரன்

யூடியூப் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருந்து சர்ச்சையில் சமீபகாலமாக சிக்கி வருபவர் டிடிஎஃப் வாசன். பல ரசிகர்களை வைத்திருக்கும் டிடிஎஃப் வாசன், யூடியூப்பில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்களை வைத்திருக்கிறார்.

சமீபத்தில் யூடியூப் வீடியோக்களை தாண்டி, மஞ்சள் வீரன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.

வெந்து தணிந்தது காடு மஞ்சள் வீரன்-க்கு வணக்கத்த போடு!! ஹீரோவாகும் கூல் சுரேஷ்.. | Ttf Vasan Out Hero Cool Suresh In Mangal Veeran

செல் அம் என்பவர் இயக்க திட்டமிட்டு பூஜையும் போடப்பட்ட நிலையில் மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வீரன் நீக்கப்பட்டார் என்றும் அவருக்கு பதில் வேறொருவர் நடிப்பார் என்றும் கூறினார்.

கூல் சுரேஷ் ஹீரோ

இந்நிலையில் மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎஃப் வாசனுக்கு பதில் நடிகர் கூல் சுரேஷ் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி பூஜையும் போட்டுள்ளார் இயக்குநர் செல் அம்.

பூஜையின் போது வெந்து தணிந்தது காடு மஞ்சள் வீரனுக்கு ஒரு வணக்கத்தை போடு என்று கூறியிருக்கிறார்.