ஒரே ஒரு படத்தில் இத்தனை கோடி சம்பளமா!! அஜித், விஜய்யை ஓரங்கட்டிய மஞ்சள் வீரன்..
சமுகவலைத்தளம் மூலம் பிரபலமானவர் வரிசையில் பைக் ஓட்டியே யூடியூப் மூலம் சம்பாதித்து வருபவர் டிடிஎஃப் வாசன். பைக் ஓட்டி பிரபலமானதை விட, போக்குவரத்து விதியை மீறியதால் புகாரில் சிக்கி பிரபலமானது தான் அதிகம்.
அந்தவகையில் சமீபத்தில் சினிமாவிலும் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் டிடிஎஃப் வாசன். இயக்குனர் செல் அம் எழுத்ஹி இயக்கும் மஞ்சள் வீரன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகி அதற்கான போஸ்டரும் இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலானது.
பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்காக டிடிஎஃப் வாசன் சுமார் 1.8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம்.
ஆரம்பத்தில் அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் அறிமுகமாகிய படத்திற்கு லட்சத்தில் தான் சம்பளமாக பெற்று வந்துள்ளனர். ஆனால் யூடியூப் மூலம் பிரபலமாகி, அறிமுகப்படுத்திலேயே கோடியில் சம்பளம் வாங்கும் டிடிஎஃப் வாசனால் தமிழ் சினிமாத்துறையே அதிர்ச்சியில் இருந்துள்ளது.
படம் ஆரம்பித்து சில நாட்களிலேயே டிடிஎஃப் வாசனின் கார் பைக்கில் சென்ற நபர் மீது மோதி சர்ச்சையாகி வழக்குபோடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.