இதையெல்லாம் செய்யாதீங்க!! தொண்டர்களுக்கு கண்டீஷன் போடும் தவெக பொதுச்செயலாளர்..

Gossip Today Thamizhaga Vetri Kazhagam Bussy Anand
By Edward Oct 14, 2024 11:30 AM GMT
Edward

Edward

Report

தமிழக வெற்றிக் கழகம்

நடிகர் விஜய் தன்னுடைய 69வது படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி முழு அரசியலில் ஈடுபடவுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இதையெல்லாம் செய்யாதீங்க!! தொண்டர்களுக்கு கண்டீஷன் போடும் தவெக பொதுச்செயலாளர்.. | Tvk Gathering Maanaadu Rules And Regulatons

இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 27 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக தவெக கட்சியில் பொதுச்செயலாளர் மாநாட்டில் தொண்டர்கள் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்ற கண்டீஷன்களை போட்டுள்ளார்.

தவெக பொதுச்செயலாளர்

தவெக மாநாட்டிற்கு வரும் கட்சி தோழர்கள் மது அருந்திவிட்டு வரக்கூடாது எனவும், பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு செய்யக்கூடாது எனவும், அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் செய்யாதீங்க!! தொண்டர்களுக்கு கண்டீஷன் போடும் தவெக பொதுச்செயலாளர்.. | Tvk Gathering Maanaadu Rules And Regulatons

இரண்டு சக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்களில் ஈடுபடக்கூடாது. பேருந்து மற்றும் வேன்களில் தகுந்த எண்ணிக்கையில் மட்டுமே தொண்டர்களை அமர வைக்க வேண்டும். நம் கட்சியில் இருப்பவர்கள் அதை செய்யக்கூடாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆலோசனை கூட்டத்திற்கு பின் விஜய் ரசிகர்கள் சில மோசமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனை நெட்டிசன்கள் பலர் விஜய் ரசிகர்கள் இப்படி ஏற்கனவே செய்ததால் கடுப்பாகி தான் பொதுச்செயலாளர் இப்படியான கண்டீஷன்களை போட்டிருக்கிறார் என்று கலாய்த்து வருகிறார்கள்.