திரிஷாவிடம் உதயநிதி ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கணும்!! நடிகை குஷ்பூ கண்டனம்..

Udhayanidhi Stalin Khushbu Trisha Gossip Today Kushboo
By Jai Aug 04, 2026 12:30 PM GMT
Report

மேகதாதுவில் அணை கட்டுவது, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து தஞ்சாவூரில் திமுக கட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய உதயநிதி, முதலமைச்சர் விஜய்யை, நடிகை திரிஷாவுடன் ஒப்பிட்டு தரக்குறைவாக பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இன்று அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

உதயநிதியின் கைதை கண்டித்து, அவர் பேசியதை எதிர்ப்பும் கிளம்பி வரும் நிலையில், நடிகையும், பாஜக மாநில துணைத்தலைவருமான குஷ்பூ எக்ஸ் தளத்தில் தன்னுடைய கருத்தை பகிர்ந்திருக்கிறார்.

திரிஷாவிடம் உதயநிதி ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கணும்!! நடிகை குஷ்பூ கண்டனம்.. | Udhayanidhi Should Ask Apology With Trisha Khusbu

நடிகை குஷ்பூ

உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கேட்டேன். மிகவும் தரக்குறைவாக, மலிவாகவும், பெண்களின் கண்ணியத்தை இழவுபடுத்தும் வகையிலும் பேசியுள்ளார். வாரிசு அரசியல் கலாசாரத்தின் பிரதிபலிப்பாக உதயநிதி பேச்சு இருந்தது. இந்த மனநிலையில் இருப்பவர்கள் ஒரு அரசியல் கட்சியை எப்படி வழிநடத்துவார்கள்.

இவர்கள் தான் நாளை தமிழகத்தை ஆளவும் விரும்புகிறார்கள். நம்மை கடவுள்தான் காப்பாற்ற வேண்டு, பெண்களை இழிவுபடுத்துவதையும், அவமதிப்பையும், கேவலப்படுத்துவதையும் அரசியல் நாடமாக்குகிறார்கள்.

அதற்கு தங்கள் ஆதரவாளர்களின் கைத்தட்டல், விசில் எதிர்பார்த்து பேசுவோரிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும். இதை சாதாரணமாக கடந்து செல்லமுடியது. சாதாரணமாக நினைப்பவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். பெண்களின் கண்ணியம் அரசியல் பலிபீடமாக மாறுகிறது. உங்கள் குடும்பம் உட்பட எந்த குடும்பமும் அதன் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியது.

திரிஷாவிடம் உதயநிதி ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கணும்!! நடிகை குஷ்பூ கண்டனம்.. | Udhayanidhi Should Ask Apology With Trisha Khusbu

அரசியல் கருத்து வேறுபாடுகள் இயல்புதான், ஆனால் பொதுவெளியில் வைக்கப்படும் கருத்துகளுக்கு எல்லைகள் இருக்க வேண்டும். பெண்கள் எப்போதும் மரியாதையுடன் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும், அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படும் பகடைக்காய்களாக பேசக்கூடாது. உதயநிதியால் தன்னுடைய அரசியல் எதிரியின் செயல்திறன், தலைமைத்துவத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால் தனிப்பட்ட அவதூறுகளையும், தரக்குறைவான வார்த்தைகளும் பயன்படுத்தி எளிதாக தப்பிக்கும் வழியாக மாற்றி விடுகிறார்கள்.

திரிஷாவிடம்

உதயநிதி, முக ஸ்டாலின் கடந்த காலங்கலில் பல சர்ச்சைகளை சந்தித்து இருக்கலாம், அதை பொது வாழ்வின் தரமாகவோ, அரசியல் நாகரீகத்தின் அளவுகோலாகவோ மாற்றக் கூடாது. பொதுமேடையில் நடிகை திரிஷாவை இழிவுப்படுத்தியதற்காக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அவரிடம் எந்த நிபந்தனையுமின்றி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு, அதற்காக மன்னிப்பு கேட்கும் துணிச்சலும், நாகரீகமும் உதயநிதிக்கு இருக்கிறஹா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று குஷ்பூ விளாசி பேசியுள்ளார்.